கனிமொழியை ஆதரித்து அமைச்சர் கீதா ஜீவன் பிரச்சாரம்

கனிமொழியை ஆதரித்து அமைச்சர் கீதா ஜீவன் பிரச்சாரம்

பிரச்சாரம்

தூத்துக்குடியில் எம்பி கனிமொழிக்கு ஆதரவாக அமைச்சர் கீதா ஜீவன் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் நேற்று மாலை 5 மணி அளவில் போல்பேட்டை பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து மீளவிட்டான், சில்வர்புரம், சின்ன கண்ணுபுரம், குறிஞ்சி நகர், போல்பேட்டை கிழக்கு, நந்தகோபாலபுரம் மெயின், சுந்தரராமபுரம், அழகேசபுரம், கந்தசாமி புரம், சக்தி விநாயகர் புரம் 1வது தெரு, ஸ்டேட் பேங்க் காலனி மெயின், கோமதி பாய் காலனி, சக்தி விநாயகர் புரம், குமரன் நகர், அம்பேத்கர் நகர், சுந்தரவேல் புரம், வட்டக்கோவில், கிருஷ்ணராஜபுரம் 1வது தெரு, மகாராஜா மசால கம்பெனி சந்திப்பு, எம்.ஜி.ஆர் பஸ் ஸ்டாப் கிருஷ்ணா ராஜபுரம் 6வது தெரு, பஸ்பர் கிணறு, காளியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story