பொதுமக்களிடம் குறைகேட்ட அமைச்சர் கீதா ஜீவன்

பொதுமக்களிடம் குறைகேட்ட அமைச்சர் கீதா ஜீவன்

 பொதுமக்கள் கொடுத்துள்ள கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவேன் என அமைச்சர் கீதாஜீவன் கூறினார். 

பொதுமக்கள் கொடுத்துள்ள கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவேன் என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அமைச்சர், அரசு துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக சேதமடைந்த கால்வாய், மழைநீர் வெளியேற புதிய கால்வாய்கள், சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு போன்ற பல்வேறு நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேற்று அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு, விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் பொட்டல்காடு கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் பொட்டல்காடு பகுதிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, மின்விளக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றும் கட்சி தி.மு.க. தான். பொதுமக்கள் கொடுத்துள்ள கோரிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story