மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன்  ஆய்வு

மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டுக்கு உட்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்டார் பள்ளிக்கூடம் அருகே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்து தர வேண்டுமென்று கோரிக்கை வரப்பெற்றதையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், விரைவில் சரி செய்து தருவதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார். ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ், வட்டச் செயலாளர் சக்திவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவருமான கந்தசாமி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story