மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்

தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அதிகனமழை பெய்தது.

வரலாறு காணாத வகையில் பெய்த இந்த மழையால், வறட்சியான பகுதியில் கூட வெள்ளம் சூழ்ந்தது. கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் இன்று ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story