முதல்வர் விழா நடைபெறும் இடத்தினை அமைச்சர் ஆய்வு

முதல்வர் விழா நடைபெறும் இடத்தினை அமைச்சர் ஆய்வு

முதல்வர் விழா நடைபெறும் இடத்தினை அமைச்சர் ஆய்வு

தர்மபுரியில் வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை புரிவதையொட்டி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விழா நடைபெறும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 11ம் தேதி பல்வேறு திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தர்மபுரிக்கு வருகை தர இருக்கிறார், இதற்கான விழா ஏற்பாடுகள் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது, விழா ஏற்பாடுகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த பயனாளிக்கு முதலமைச்சர் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறார். மாபெரும் விழாவாக நடைபெறு இருக்கிறது, குறிப்பாக அதிகளவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கா இருக்கிறது, மகளிருக்கு என்றும் திமுக அரசு முன்னுரிமை கொடுக்கும் அந்த வகையில் மகளிருக்கு அதிகளவு நலத்திட்டங்களை வழங்க இருக்கிறார்,

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள் குறித்து ஜப்பான் நாட்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடக்க இருப்பதாகவும் அமைச்சர் இருப்பதாகவும் தெரிவித்தார் இந்த நாவின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் திமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story