திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு

திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர் வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் பெருச்சிபாளையம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 90 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணி , நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ வ வேலு கட்டிட கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட உள்ள வசதிகள் , கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,

சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல பத்மநாபன் , மூன்றாவது மண்டல தலைவர் கோவிந்தசாமி , மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் , மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் , புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் முருகநாதன் , தெற்கு மாநகர திமுக செயலாளர் டி கே டி நாகராசன் , இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக அவிநாசி அரசு மருத்துவமனை மற்றும் 15 வேலம்பாளையம் மருத்துவமனை கட்டிடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ வ வேலு , திருப்பூர் மாநகராட்சி தமிழகத்திலேயே புகழ்பெற்ற மாநகராட்சியாக இருந்து வருகிறது. பொதுப்பணித்துறை சார்பாகவும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

அதிலும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் செயல்படக்கூடிய மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் பொதுப்பணித்துறை சார்பாக ஃப்ரீ காஸ்ட் டெக்னாலஜி மூலம் கட்டப்பட்டு வருகிறது. அதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்வதற்காக இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அலுவலர்களின் தொடர்க கண்காணிப்பில் கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டப்பட்டு வரக்கூடிய நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வரக்கூடிய வகையில் பணிகள் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் வேலம்பாளையம் பகுதியில் பன்னாட்டு அமைப்பின் நிதியின் மூலம் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளும் அவிநாசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரத்தியாக கட்டிட கட்டுமான பணிகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

அன்னிய செலவாணியை ஈட்டி தரக்கூடிய சிறந்த நகரமாக விளங்கக்கூடிய திருப்பூர் நகரின் வளர்ச்சிக்கு முழு பங்களிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தொடர் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். அண்ணாமலை விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர் எ வ வேலு. கோவையில் நடைபெறும் முப்பெரும் விழா அரசு விழா அல்ல , தமிழகத்தில் 40க்கு 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடவைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா , தமிழகத்தை இந்தியாவின் சிறந்த நகரமாக வடிவமைத்த கலைஞருக்கான நூற்றாண்டு நிறைவு விழா ,

இந்தியா முழுவதும் கூட்டணியை ஒருங்கிணைத்து சகோதரத்துவத்துடன் அதனை வழிநடத்தி தமிழகத்தில் 40 தொகுதிகளையும் வெற்றி பெற வைத்த கழகத் தலைவர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தலைவருக்கான பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது.

அண்ணாமலைக்கு மக்கள் வாக்களித்து இருந்தால் அவர் நன்றி தெரிவிக்கலாம் அதனால் அவருக்கு அந்த வேலை இல்லை. ஆனால் நாங்கள் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க இருக்கிறோம் என பேசினார்.

Tags

Next Story