படகு இல்லம் அமைக்கும் இடத்தை அமைச்சர் ஆய்வு
ஆய்வு மேற்கொண்ட போது
திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டிபாளையம் ஏரியினை சுற்றுலா தளமாக மேம்படுத்தி படகு சவாரி , நீர் விளையாட்டுகள் மற்றும் பார்வையாளர் மாடம் அமைப்பதற்கு கடந்த 2022-23 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்து 2023 ஏப்ரல் மாதம் முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
வருகின்ற நவம்பர் மாதம் பணிகள் முடிந்த பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் இன்று அப்பகுதியில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் திருப்பூர் போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் சுற்றுலா வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் ஆட்டிபாளையம் குளம் தேர்வு செய்யப்பட்டு சுற்றுலா தளமாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் , முதற்கட்டமாக 20 படகுகளுடன் படகு இல்லம் தொடங்கப்படும் எனவும் , அதற்கேற்ற வரவேற்பை பொறுத்து விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஆண்டிபாளையம் குளம் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் போது அதிக மக்கள் இதனை பயன்படுத்த தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அடுத்த கட்ட நகர்வுக்கு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.