பழக்கடையில் பழங்களை விற்று அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பழக்கடையில் பழங்களை விற்று அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பழக்கடையில் பழங்களை விற்பனை செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரித்தார்.
அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ 6 ஆவது நாளாக காலையும் மாலையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து இன்று காலை முதல் பெரம்பூர் ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, திரு வி க நகர் பகுதிகளில் அதிமுக வட சென்னை தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து காலை திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு பகுதி 74 வது வட்டம் குளக்கரை சாலையில் தொடங்கி, 74 வது வட்டம் சந்திரயோகி சமாதி வரை பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் பெரம்பூர் கிருஷ்ணதாஸ் மெயின் ரோடு, மங்காலபுரம் பகுதியில் தையல் கடை, பெட்டிக் கடைகளில் வாக்கு சேகரித்தார். அதே போல் மாலை திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு பகுதி 71 வது வட்டம் பெரம்பூர் அம்பேத்கர் சிலை தொடங்கி, 71 வது வட்டம் ஸ்டேட் பேங்க் காலணி வரை பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் தொடக்கத்தில் பழக்கடையில் பழங்களை விற்பனை செய்து வாக்கு சேகரித்தார், தொடர்ந்து பெரம்பூர் பாரதி ரோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது அங்கு ஒருவர் வீட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். உடன் தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர், செல்லும் வழியெல்லாம் மலர் தூவி, மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story