அமைச்சர் கே. என். நேரு, மேயர் அன்ழகன் திருச்சி கோர்ட்டில் ஆஜர்

அமைச்சர் கே. என். நேரு, மேயர் அன்ழகன் திருச்சி கோர்ட்டில் ஆஜர்

அமைச்சர் கே.என்.நேரு 

அனுமதியின்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் கே. என். நேரு உட்பட ஐந்து நபர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது ஏப்ரல் 15ந் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு அப்போது திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆக இருந்த நேரு மற்றும் திமுக மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, திமுக நிர்வாகிகள் ராமதாஸ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் அனுமதியின்றி ஒன்று கூடி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

போலீசாரிடம் அனுமதி வாங்காமல் சிலைக்கு மாலை அணிவித்தது தொடர்பாக திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் ஐந்து பேர் மீது திருச்சி ஜெ.எம் 1 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. அமைச்சராக இருக்கும் கே என் நேரு மற்றும் திமுக மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, தற்போது கவுன்சிலராக இருக்கும் ராமதாஸ் ,வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலாஜி (பொறுப்பு) வழக்கை வருகிற ஜனவரி 11ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags

Next Story