கடலூர்: வெள்ளி கடற்கரையில் அமைச்சர் அடிக்கல் நாட்டல்
அடிக்கல் நாட்டல்
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பகுதியில் கடற்கரை சுற்றுலாதலம் அமைக்க அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட தேவனாம்பட்டினம் பகுதியில் மூலதன மானிய திட்ட நிதியின்கீழ் ரூ. 4. 98 கோடி மதிப்பீட்டில் வெள்ளிக் கடற்கரையை சிறந்த சுற்றுலா தளமாக பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்பாடு செய்யும் பணிக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஜயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜராம், மாநகராட்சி துணைமேயர் பா. தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையர் மு. காந்திராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
Next Story