5 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

5 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை  தொடங்கி வைத்த அமைச்சர்

அமைச்சர் மூர்த்தி 

மாணவர்களும், பொதுமக்களும் மரம் வளர்க்க ஆர்வம் கொள்ள வேண்டும் என மேலூர் அருகே 5 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி பேசினார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள மகாத்மா தனியார் பள்ளியில், ஈஷா கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாவட்ட முழுவதும் 5 லட்சம் பயன் தரும் மரங்கள் வளர்ப்பதற்கான திட்டத்தை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் , தமிழகத்தை பசுமையாக மாற்றவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு உறுதுணையாக மாணவர்களும் இல்லம்தோறும் இரண்டு மரங்களை வளர்ப்பதற்கான முயற்சிக்க வேண்டும்.

ஈஷா மையம் சார்பில் தற்போது விவசாயிகளுக்கான பயன்பெறும் மரங்கள் வழங்கப்பட்டு வருகிறது இதன் மூலம் விவசாயிகள் பெருமளவில் பயன் பெற்று, பொருளாதாரம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என்ற அப்போது பேசினார். தொடர்ந்து திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மரக்கன்று நட்டு விவசாயி மற்றும் மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஈஷா மையம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story