அமைச்சர் சு முத்துசாமி வெளியிட்ட முக்கிய தகவல்

அமைச்சர் சு முத்துசாமி வெளியிட்ட முக்கிய தகவல்

அமைச்சர் முத்துசாமி

மதுபான கூடங்களில் அதிக விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்ர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி , மதுபான கூடங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறுவது சோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ளது.விரைவில் அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

Tags

Read MoreRead Less
Next Story