ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

அமைச்சர் ஆய்வு 

ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டபணிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

சமீபத்தில் தமிழக முதல்வர் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சோலார் பகுதியில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தை வளாகம் , வஉசி பூங்கா ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்துதல் மற்றும் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.30.00 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்படுத்துதல், ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட 9 புதிய திட்டங்களை அறிவித்தார்கள்.

இத்திட்டங்களை செயல்படுத்தல் குறித்து ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சோலார், வ.உ.சி. பூங்கா மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் , தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது. ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி , பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story