ஆத்தூர் : தேர்தல் பிரச்சார ௯ட்டத்திற்கு இடத்தை அமைச்சர் நேரு ஆய்வு
கே என் நேரு ஆய்வு
திமுக தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற 30ஆம் தேதி கள்ளக்குறிச்சி தொகுதி சேலம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திற்காக பெத்தநாயக்கன்பாளையம் இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்ற இடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்ற இடத்தினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே என் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் எஸ் சிவலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Next Story