தூத்துக்குடியில் அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு

தூத்துக்குடியில் அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு

நிவாரண உதவி 

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வெள்ள பாதிப்பு, நிவாரண பணிகள் மற்றும் நிவாரண தொகை வழங்கும் பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலில் இருந்து மக்களை மிட்க அனைத்து துறையினரும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒன்றினைந்து பணியாற்றி தற்போது சகஜ நிலை திரும்பி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 21ம் தேதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்தும், ஆய்வுக்கூட்டங்கள் வாயிலாக பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்து, இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்ப்பதற்காக பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டார். ”அதிகனமழையின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்”. மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் . - என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுப்புகளை வெளியிட்டார்.

அதன்படி பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது அனைத்து வட்டங்களிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலிபடி கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தூத்துக்குடி மாவட்ட ஏரல் வட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரணப்பணி நடைபெற்று பகுதிகளை ஆய்வு செய்தார். அது சமயம் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத்தொகை வழங்கி வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு நிவாரணத்தொகையினையும் வழங்கினார். இந்நிகழ்வின் போது, திருக்களூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபஞ்சன், கூட்டுறவு சங்க மாவட்ட துணை பதிவாளர் ரவீந்திரன், வட்டாட்சியர் மலர்தேவன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் அகியோர் உடன் உள்ளனர்.

Tags

Next Story