குமரி கலை விழாவில் மேடையில்  சிலம்பம் ஆடி அசத்திய அமைச்சர்

குமரி கலை விழாவில் மேடையில்  சிலம்பம் ஆடி அசத்திய அமைச்சர்
குமரி கலை விழா மேடையில் சிலம்பம் ஆடிய அமைச்சர் மனோதங்கராஜ்
கன்னியாகுமரியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றியது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் குமரி கலை விழா நிகழ்ச்சிகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தொடங்கியது. இந்த கலை விழா வரும் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வைத்தார். மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சதீஷ்குமார் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ், டிஎஸ்பி மகேஷ் குமார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கலை விழாவை வெட்டி தினமும் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் தினமும் நடக்கிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.அப்போது விழாவில் அனைவரும் வற்புறுத்தியதன் பேரில் பாரம்பரிய கலைகளில் வீர விளையாட்டு கலையான சிலம்ப கலையை அமைச்சர் மனோ தங்கராஜ் மேடையில் ஆடி அசத்தினார்.

Tags

Next Story