முதல்வர் ஸ்டாலின் கல்வியை கண்ணாக நினைக்கிறார் - அமைச்சர் பொன்முடி

முதல்வர் ஸ்டாலின் கல்வியை கண்ணாக நினைக்கிறார் - அமைச்சர் பொன்முடி

மாணவர்களுடன் அமைச்சர் பொன்முடி

முதல்வர் ஸ்டாலின் தனது இரு கண்களில் ஒரு கண்ணாக கல்வித்துறையை பாவித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

முகையூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் பொன்முடி மாணவிகளை இனிப்பு வழங்கி வரவேற்றார். தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக முகையூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.

அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, வரவேற்று, விலையில்லா பாடப் புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கி பேசியதாவது. பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி இன்றைய தினமே அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

மறைந்த முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் கல்வித்துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தினார். அதன் வழியில் முதல்வர் ஸ்டாலின் தனது இரு கண்களில் ஒரு கண்ணாக கல்வித்துறையை பாவித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்ற நிலை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்கு ஒரு அரசு கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story