வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர்

வளர்ச்சிதிட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
அரியலூர் மாவட்டத்தில் குமிழியம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் குமிழியம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் 27.75 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். இதனையடுத்து பிலாக்குறிச்சி கிராமத்தில் 13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
வீராக்கண் கிராமத்தில் 12.3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட நியாயவிலை கடையினை திறந்து வைத்தார். இதேபோல் செந்துறை, மருவத்தூர், சேடக்குடிகாடு, நக்கம்பாடி, நிண்ணியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
