மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாமினை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு
அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு
அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஓடாநிலை சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் இம்முகாமானது ஜனவரி 06 ம் தேதி வரை சுமார் 87 இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , கடந்த 2 நாட்களில் மட்டும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 5202 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரவித்தார். அமைச்சர் சு.முத்துசாமி "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாமில் இன்று மனு வழங்கிய ஒரு நபருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பெயர் மாற்றம் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
Next Story