ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆய்வு

திருவானைக்காவல் அருகே பனையபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொணடார்.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பனையபுரம் ஊராட்சி ஆகும்.இந்த ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 52 மாணவர்கள் 39 மாணவிகள் உட்பட 91 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீரென பள்ளியில் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு பற்றியும் ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்தார்.மேலும் பள்ளி மாணவர்களிடம் பாட புத்தகங்களை படிக்க சொல்லி கேட்டறிந்ததோடு நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.அப்போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு போதிய கழிவறை வசதி இல்லை என அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி அளித்து சென்றார்.

Tags

Read MoreRead Less
Next Story