அங்கன்வாடிக்கு நாற்காலி மேசையை அமைச்சர் வழங்கல் !
நாற்காலி மேசை
தூத்துக்குடியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தரையில் அமர்ந்து கல்வி கற்று வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையங்களை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் குழந்தைகள் தரையில் அமர்ந்து கல்வி கற்பதை பார்த்து அமைச்சர் உடனடியாக தனியார் நிறுவன நிதி பங்களிப்புடன் நாற்காலி சேர் வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி தூத்துக்குடியில் உள்ள சாகிர் உசேன் நகர், தெர்மல் நகர், கோவில் பிள்ளைநகர், முத்து நகர், அத்திமர பட்டி, எம்ஜிஆர் நகர், உள்ளிட்ட 10 அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் அமர்ந்து படிக்கும் வகையில் நாற்காலில் மேசையை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வழங்கினார்.
மேலும் அங்கன்வாடி மையத்திற்கு வருகை தந்து அமைச்சர் கீதா ஜீவனுக்கு குழந்தைகள் ரோஸ் பூ வழங்கி வரவேற்றனர் மேலும் குழந்தைகள் கற்கும் கல்வி மற்றும் அவர்களுக்கு வழங்கும் உணவு குறித்து ஆசிரியரிடம் அமைச்சர் கீதா ஜீவன் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலாகுருசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.