நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

விருதுநகர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ATM கார்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ATM கார்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1051 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட ATM கார்டுகள் உள்பட 1668 நபர்களுக்கு அரைமணி நேரத்திற்கு மேலாக மேடையில் நின்று கொண்டே வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் தென்காசி மற்றும் ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தெலுங்கானா ராஜஸ்தான் உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி யாக கொடுத்து வருகின்றனர் என்றார்.

மேலும் பேசிய உதயநிதி திமுக அரசின் திட்டங்கள் எல்லாம் கலாச்சார ரீதியாக பெண்களை முடக்குவதில் இருந்து மீட்டு வருவதே திராவிட மாடல் அரசு என்றார். பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் அப்போதுதான் உங்களுடைய உரிமைகளை பெற முடியும் என தெரிவித்தார். மேலும் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண்கள் தங்களுடைய செல்போனுக்கு வரும் தகவல்களை நன்கு ஆராய்ந்த பின்பே மற்றவர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் பேசிய அமைச்சர் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல பெண்கள் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்

Tags

Next Story