அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு குமரி வருகை.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு குமரி வருகை.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

தி.மு.க.வின் 2-வது இளைஞரணி மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இளைஞர் அணி மாநாடு விளக்க இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து இளைஞர் அணி மாநாடு விளக்க இரு சக்கர வாகன பேரணியை நாளை (15-ந்தேதி) தொடங்கி வைக்கிறார். பேரணியை தொடங்கி வைக்க உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு கன்னியாகுமரி வருகிறார். நாளை காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கிறார். பின்னர் சிறிது தூரம் அவரும் இருசக்கர வாகன பயணம் மேற்கொள்கிறார். இந்த பேரணியில் 200 பைக்குகள் இடம் பெறுகின்றன. பின்னர் நவம்பர் 27-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளன்று பைக் பேரணி சென்னை சென்றடையும்.

Tags

Next Story