தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

தேர்தல் பிரச்சாரம் 

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது மகளிர் அணி சார்பாக பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக சென்று வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின் ,ஓட்டுக்காக மட்டும் நான் வரவில்லை .இதற்கு முன் புயல் ,மழைவெள்ளம் என அத்துணை பிரச்சனைகளுக்கும் உங்கள் உடன் நான் பயணித்து தீர்வு கண்டுள்ளேன் என பேசினார் .4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் நான் வாரம் இரு முறை இங்குவந்து உங்கள் பிரச்னைகளை கேட்டறிந்து இன்னும் இந்த தொகுதியின் தரத்தை உயர்த்துவதாக பரப்புரை செய்தார் .நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு என எதுகை மோனையில் பேசி பொதுமக்களை சிந்தனை கலந்த சிரிப்பில் ஆழ்த்தினார்

Tags

Read MoreRead Less
Next Story