காரியாபட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

காரியாபட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
 தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் துவங்கினார்.

இந்தியா கூட்டணியை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து ஏணி சின்னத்தில் வாக்களிக்க கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களை இந்த தேர்தலில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நாடாளுமன்ற மன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சார கூட்டம் இது எனவும் இந்த எழுச்சி கூட்டத்தை பார்க்கும் போது இந்த தேர்தலில் நாவாஸ்கனியை வெற்றி அடைய செய்வீர்கள் என தெரிவாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக அரசு ஏதாவது செய்து இருக்கிறதா என கேள்வி எழுப்பினர்.

தமிழகத்திற்கு, தேர்தலுக்கு மட்டும் பிரதமர் வருவர் எனவும், நான் செங்கல எடுத்து காட்டுவேன், தமிழ்நாடு மீது அக்கறை இருந்தா பிரதமர் எப்போதே வந்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர் , தமிழகத்திற்க்கு 37 ஆயிரம் கோடி கேட்டு மத்திய அரசு வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அடிமையாக இருந்த அரசு அடகு வைத்து விட்டதாகவும், மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பிச்சவங்க 1 கோடியே 60 லட்சம் பெண்களில் உரிமை தொகை கிடைக்காத அனைவருக்கும் உரிமை தொகை கிடைக்க வழி வகை செய்யப்படும் என்பதை அறிவிப்பாக வெளியிடுவதாகவும் கூறினார்.

இந்த தேர்தல் நமக்கு மிகவும் முக்கியமானது ஒருபுறம் நமது தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மறுபுறம் பிரதமர்மோடி உள்ளார்கள். இந்த தேர்தலில் நரேந்திரமோடியா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா என பார்க்க வேண்டிய தேர்தல் அதை நீங்கள் அதை செய்வீர்களா என கேள்வி எழுப்பினர்.

Tags

Next Story