திருப்பூருக்கு 11ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை

திருப்பூருக்கு 11ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை


4-வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க வருகிற 11-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகிறார்.


4-வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க வருகிற 11-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகிறார்.

4&வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க11&ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை விழா ஏற்பாடுகளை மேயர் ஆய்வு திருப்பூர், 4&வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க வருகிற 11&ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகிறார். இந்நிலையில் விழா ஏற்பாடுகளை மேயர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். திருப்பூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள் ளது. தினமும் 196 எம்.எல்.டி. அளவு குடிநீரை சுத்திகரிப்பு செய்து மாநகர மக்களுக்கு வழங்கும் வகையில் கட்டமைப் புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தொடக்க விழா வருகிற 11-ந்தேதி காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு தயாராக உள்ள டவுன்ஹால் மாநாட்டு அரங்கையும் திறந்து வைக்கிறார்கள்.


இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி மற்றும் கலெக்டர், எம்.எல்.ஏ., மேயர், மக்கள் பிரதிநிதி கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இதனை நேற்று மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது விழா ஏற்பாடுகள் குறித்தும், எந்த ஒரு சிரமம் இன்றியும் விழா நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Tags

Next Story