திமுக நிர்வாகிக்கு தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திமுக நிர்வாகிக்கு தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தங்க மோதிரம் அணிவித்த உதயநிதி 

தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு சிறப்பாக நடக்க பணியாற்றிய சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்து பாராட்டினார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சிறக்க பாடுபட்டதற்காக சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமாருக்கு கட்சியின் இளைஞரணி மாநில செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தங்க மோதிரம் அணிவித்து பாராட்டினார். அப்போது நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதேபோல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகளும் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

Tags

Next Story