குமாரபாளையம் மக்கள் யாரும் ஏமாந்து விட வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் ஆதரித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தின் ஈடுபட்டார்.
அப்பொழுது ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள அடிமை கூட்டணியை ஓட விடும் கூட்டணியாக மதசார்பற்ற கூட்டணி தமிழகத்தில் உள்ளது. சென்ற முறை மறைந்த கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தியை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். அதே போன்று இந்த முறை திமுக வேட்பாளரை எத்தனை லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க போறீங்க. குறைந்தபட்சம் 4லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலை போல குமாரபாளையம் தொகுதி மக்கள் ஏமாந்து விட வேண்டாம். குமாரபாளையத்தில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் இருந்தாலும், குமாரபாளையத்தில் புதிய பேருந்து நிலையம், வாரசந்தை அறிவியல் நூலகம்,உயர் மட்ட பாலம்,புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் சொல்வதை செய்வோம் செய்வதைதான் சொல்வார் அதே வழியில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் பள்ளிபாளையம் சாய கழிவு பிரச்சனைக்கு பொதுசுத்தகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆனங்கூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2014ம் ஆண்டு சிலிண்டர் விலை விட தற்போது ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆனால் மோடி 100 ரூபாய் குறைத்து விட்டு நாடகம் செய்கிறார் இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் டீசல், பெட்ரோல், சிலிண்டர் விலை குறைக்கப்படும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது எல்லாம் நடக்க 19ம் தேதி திமுக சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா பெரும் தொற்று சமாளித்தார்., கோவிட் தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் தனக்கு செலுத்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முதல் கையெழுத்து போட்டு பெட்ரோல் விலை 3ரூபாய் குறைப்பு, மகளிர் இலவச பேருந்து சேவை, இதனால் மகளிர் பயனடைந்து வருகிறார்கள் அதை இப்போது ஸ்டாலின் பேருந்து என மகளிர் சொல்லி வருகிறார்கள். ஒரு திட்டத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்தி கொள்வது என்பது குறித்து பெண்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்., இதை கர்நாடக மாநிலத்தில் விரிவுபடுத்தி உள்ளார்கள் இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை. பெண் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படிக்க புதுமைப் பெண் திட்டம் கொண்டு வந்தார். இந்தியாவில் 24 சதவீதம் பேர் தான் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் 54சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். புதுமைப் பெண் திட்டம் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் கல்லூரி படிப்பு தொடர்கிறார்கள் 18ஆயிரம் மாணவிகள் நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள் திராவிட மாடல் அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது தான் திராவிட மாடல் அரசு காலை உணவு திட்டம் தெலுங்கானா, கர்நாடக மாநில மட்டுமின்றி கனடா நாட்டில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருக்கிறார்கள் இதனால் உலகத்தில் உள்ள நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திராவிட மாடல் அரசு உள்ளது., இதில் 44ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள் மகளிர் உரிமைத் தொகை மூலம் 1கோடியே 60லட்சம் பேரில் 1கோடியே 17லட்சம் தகுதி செய்யப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் வருகிறது தகுதியுள்ள மகளிருக்கு கண்டிப்பாக அனைத்து மகளிருக்கு மகளிர் உரிமை த் தொகை திட்டம் வழங்கப்படும் என நான் துறை அமைச்சராக வாக்குறுதி கொடுக்கிறேன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்துள்ளேன் அவர் பெயர் 29பைசா அப்படி நீங்கள் கூப்பிட வேண்டும் 29பைசா செல்லா காசாக உள்ளது.
அதே போல் ஜீன் 4ம் தேதி பிறகு அவரும் இது போல தான் தமிழகத்திற்கு 1ரூபாயாக மத்தி அரசுக்கு வருவாய் கொடுத்தால் நமக்கு 29பைசா மட்டுமே நமக்கு திருப்பி கொடுக்கிறது ஆனால் உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிக நிதி கொடுக்கிறது ஆனால் தமிழகத்திற்கு குறைந்த அளவு வழங்கினார். இதனால் தமிழகத்திற்கு சிறப்பாக செய்யும் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லவில்லை எடப்பாடி பழனிசாமி சசிகலா காலை பிடித்து முதல்வராகிய நிலையில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு சசிகலா உட்பட மொத்த தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி 2010ம் ஆண்டு இந்திய முழுவதும் நீட் தேர்வு வந்தது.
ஆனால் கலைஞர் முதல்வராக இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை பிறகு ஜெயலலிதா இருந்த போது நீட் தேர்வு வரவில்லை அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நீட் தேர்வு கொண்டு வந்து அனிதா உட்பட 22குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நீட் தனியார் பயிற்சி வகுப்புக்கு செல்ல பணம் இல்லை இந்திய கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு விலக்கு பெற திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார் 2021ம் ஆண்டு சொன்னபடி நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு பெற அனைத்து சட்டரீதியான திமுக நடவடிக்கை எடுத்தது ஆனால் ஆளுநர் ஒத்துழைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை ஆளுநர் பெயர் ரவி இல்லை ஆர் ஆர்எஸ் ரவி என்று தான் சொல்ல வேண்டும் அவர் வெறும் தபால்காரர் மட்டும் தான் தமிழகத்தின் உரிமைகளை மீட்க வரும் 19ம் தேதி வாக்களிக்க வேண்டும்,தமிழகத்தில் உள்ள அருந்ததியர் மக்களுக்கு 3%இடஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர் சென்னை தென் மாவட்டங்களில் பேரிடர் போது நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஆனால் ஒன்றிய அரசு பேரிடர் நிதியாக 36ஆயிரம் கோடி ரூபாய் கேட்டும் தரவில்லை வரும் 10நாட்களில் ஒவ்வொரு தொண்டரும் பொறுப்பு எடுத்து வாக்காளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வேட்பாளர் பிரகாஷை 4லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்