விருதுநகரில் இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கிய அமைச்சர்

விருதுநகரில் இலவச வீட்டு மனைப்பட்டாக்களை  வழங்கிய அமைச்சர்
வீட்டுமனை பட்டாகளை வழங்கிய அமைச்சர்
விருதுநகரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 575 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் லட்சுமி நாராயண திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் , இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் , சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 575 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வழியில் செயல்படும் தமிழக அரசு, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பல்வேறு துறைகள் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, நமது மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் 38 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா ரூ.50.69 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம் வட்டாரத்தை சேர்ந்த 70 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் 40 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா ரூ.49.40 இலட்சம் மதிப்பிலும், வத்திராயிருப்பு வட்டாரத்தை சேர்ந்த 104 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் 35 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா ரூ.25.52 இலட்சம் மதிப்பிலும்,

வெம்பக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த 17 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.6.52 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி வட்டாரத்தை சேர்ந்த 47 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் 53 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா ரூ.10.72 இலட்சம் மதிப்பிலும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 44 பயனாளிகளுக்கு ரூ.17.20 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும்,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 65 பயனாளிகளுக்கு ரூ.16.25 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், என மொத்தம் 575 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயலாற்றி வருகிறார். மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களோடு நமது விருதுநகர் மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும். மேலும், தகுதியானவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற பொதுமக்களின் நலனுக்கான நலத்திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செய்து வரும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Tags

Next Story