விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்
ஓகளுர் மற்றும் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 138 மாணவ,மாணவிகளுக்கு ரூ.6,67,800 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
தமிழக அரசின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாண மாணவிகளுக்கு இலவச அமைதி வண்டி வழங்கப்பட்டு வருகிறது அதில் இந்த ஆண்டு க்காண இலவச மிதிவண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது இதில் ஜனவரி 24ஆம் தேதி மாலை ஓகளுர் மற்றும் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 78 மாணவர்களுக்கு ரூ.3,82,200 மதிப்பிலான இலவச மிதிவண்டிகளையும், 60 மாணவிகளுக்கு ரூ.2,85,600 மதிப்பிலான இலவச மிதிவண்டிகளையும் என மொத்தம் 138 மாணவ,மாணவிகளுக்கு ரூ.6,67,800 மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் வழங்கினார். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story