நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளின் மூலம் 2,297 பயனாளிகளுக்கு ரூ.16.70 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, பல்வேறு அரசுத்துறைகளின் மூலம்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பல்வேறு துறைகளின் மூலம் 2,297 பயனாளிகளுக்கு ரூ.16.70 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் வழங்கினார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேசியபோது தமிழக அரசு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2,297 பயனாளிகளுக்கு 16.70 கோடி மதிப்பிலான

பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு மக்களுக்கான அரசு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். எனவே மக்களுக்காக உழைக்கும் . தமிழ்நாடு முதலமைச்சருக்கு மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், ஊராட்சிஒன்றியக் குழுத் தலைவர்கள் பெரம்பலூர் மீனா அண்ணாத்துரை ,

வேப்பந்தட்டை இராமலிங்கம், வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை இயக்குநர் பூபதி, பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் வள்ளியம்மை ஜாகிர் உசேன், பாக்கியலட்சுமி, நகர்மன்றத் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story