விருதுநகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
விருதுநகர் மருத்தவ கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் 2552 பயனாளிகளுக்கு 12 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய்த் துறை கூட்டுறவுத்துறை மகளிர் மேம்பாட்டு கழகம், வேளாண்மை துறை மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலமாக அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு 2552 பயனாளிகளுக்கு 12 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச் சந்திரன் கலைஞர் என்பவர் மிகப்பெரிய பிம்பம்,கலை, எழுத்து இலக்கியம் அரசியல் என எல்லா வகையிலும் சிறந்து விளங்கியவர் கலைஞர் என்றும் அவரது நூற்றாண்டு பிறந்தநாளான இன்று 2552 பயனாளிகளுக்கு இலவச வீட்டிமனை பட்டா,மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி என 12 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கியதாக குறிப்பிட்டார்.
மேலும் 119 மாற்றுத்திறனாளி களுக்கு ரூபாய் 1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர பெட்ரோல் வாகனம் வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் தான் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகமான மூன்று சக்கர பெட்ரோல் வாகனம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.