புதிய மின் மாற்றிகளை துவங்கி வைத்த அமைச்சர்
பொன்னமராவதி அருகே புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மின்மாற்றிகளை அமைச்சர் ரகுபதி செயல்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் மேல தானியம் கிராமத்தில் ரூபாய் 19.66 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு புதிய மின் மாற்றிகளை சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை, மற்றும் ஊழ ல் தடுப்பு அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். உடன் மின்சார வாரிய செயற்பொறியாளர் எம்.ஆனந்தாய் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்து, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் உள்ளனர்.
Next Story