பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்களுடன் அமைச்சர் கலந்தாய்வு
கன்னியாகுமரி மாவட்ட பால்வளத்துறை சார்பில் ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று (02.02.2024) நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கலந்து கொண்டு குடியரசு தின விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சிறந்த முறையில் பால் வழங்கி வருகின்ற பயனாளிகள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், அதிகமாக செயற்கை கருவூட்டல் முறை செய்த கிராம நல பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கியதோடு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
துணை பதிவாளர் (பால்வளத்துறை) சைமன் சார்லஸ், பொது மேலாளர் (ஆவின்) அருணகிரிநாதன், கால்நடை மருத்துவர் மரு.சண்முகம், மேலாளர்கள், பால் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.