அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரணியன் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கள ஆய்வு செய்து அங்குள்ள பாதிப்புகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி,தென்காசி ஆகிய மாவட்டங்களில் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படட்டு வருகின்றது. நாள் ஒன்றுக்கு நடமாடும் மருத்துவ முகாம் மூலம் ஒரு வாகனம் மூலம் மூன்று அல்லது நான்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றது.

நேற்று இரவு வரை தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 2-ஆயிரத்து 82-மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 66-ஆயிரத்து 756- பேருக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி-க்கு மட்டும் 48-க்கும் மேற்பட்ட மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு மருத்துவம் அளிக்க மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயிற்ச்சி மருத்துவர்கள் வந்துள்ளனர். தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பெய்த மழையினால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மழை நீரில் மூழ்கி பாதிப்பு அடைந்ததில் பல பொருட்கள் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது முக்கிய கருவிகளான இருதய சிகிச்சை அளிக்கும் கருவிகள் சேதமடைந்துள்ளதால் சென்னையில் அதனை சரிபார்க்க குழுக்கள் வருகின்றது.

அதைபோல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுந்து உள்ளதால் அங்கு வைக்கப்பட்டிருந்த இறந்தவர்கள் உடலை பாதுகாக்கவோ அல்லது பிரேத பரிசோதனை செய்ய முடியாததாலோ நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரிய அளவில் மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக காப்பீடு திட்டத்தில் உறுப்பினரக உள்ள மதுரை மீனாட்சி மிஷின்,வேலம்மாள்,அப்பலோ போன்ற பெரிய மருத்துமனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

Tags

Next Story