அமைச்சர் ஆய்வு
மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் ராஜகோபுரம் முன்பு பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணியை அமைச்சர் ராஜா ஆய்வு செய்தார்.
மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் ராஜகோபுரம் முன்பு பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணியை அமைச்சர் ராஜா ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசாமி திருக்கோவில் ராஜகோபுரம் முன்பு நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் ஆலய கிருஷ்ண தீர்த்த குளத்தில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story