தேர்தல் பறக்கும் படையினரால் அமைச்சரின் கார் சோதனை

தேர்தல் பறக்கும் படையினரால் அமைச்சரின் கார் சோதனை

அமைச்சர் கார் சோதனை

காரைக்கால்- மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் நண்டலாறு சோதனைச் சாவடியில் அமைச்சரின் காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா. போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை எல்லைக்குள் நுழையும் சாலையில் நண்டலாறு சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அமைச்சரின் காரை வழி மறித்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சருடன் சென்ற பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் காரையும் சோதனை செய்தனர். பணம் பொருட்கள் எதுவும் கை பற்றப்படவில்லை.

Tags

Next Story