அவினாசி அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு
அவிநாசி அரசு மருத்துவமனையில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள கோவை சென்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (16.6.24) அவிநாசி பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மருத்துவமனையில் உள்ள மருந்தகம் , ஆண்கள் - பெண்கள் மருத்துவ பகுதி, அறுவை சிகிச்சை அரங்கம் , மருத்துவமனையில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவை ஆய்வு மேற்கொண்டார் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
Next Story