அவிநாசியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர்கள்

அவிநாசியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர்கள்

மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்


திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்கள் கணினி மூலம் பதிவு செய்த கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலதலைவர் இல. பத்மநாபன், அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story