சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட மாநாடு

X
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாடு
சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட மாநாடு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோந்த சிறுபான்மையினருக்கு இலவசப் பட்டா வழங்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில், திண்டுக்கல் மாவட்ட அளவிலான 4-ஆவது மாநாடு வேடசந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த மாநாட்டுக்கு, சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்டத் தலைவா் ஏ. அரபுமுகமது தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் ஏ. சூசைமேரி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜபருல்லாக்கான், சக்கரை முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலச் செயலா் எம். ராமகிருஷ்ணன் பேசினாா். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு: சிறுபான்மை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். வங்கிக் கடன் வழங்க வேண்டும். திண்டுக்கல்லில் அரசுச் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Tags
Next Story
