விற்பனையாளர்கள் மீது மர்ம நபர்கள் தாக்கு: ரூ. 1.80 லட்சம் கொள்ளை
காவல் நிலையம்
திருமயம் பாம்பாற்று பாலம் அருகே டாஸ்மார்க் மதுபான கடை உள்ளது. இரவு 10 மணி அளவில் விற்பனையாளர் சுரேஷ் கணக்கை முடித்து இருப்பை சரிபார்த்து கொண்டிருந்து உள்ளார்.
அப்போது முகத்தை துண்டால் மூடிக்கொண்டு அங்கு வந்த மூன்று பேரில் ஒருவன் சுரேஷின் கையில் அறிவாளால் வெட்டி உள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் ஓடி உள்ளார் ஆனால் மூவரும் விடாமல் அவரை துரத்தி அடித்துள்ளனர். தடுக்கச் சென்ற மற்றொரு கடை விற்பனையாளர் புஷ்பராஜையும் அடித்து உதைத்துள்ளனர். இதன் பின்பு ஷட்டர் கதவை திறந்து லாக்கரில் இருந்த 1.80 லட்சம் ரொக்கத்தை திருடி சென்று விட்டனர்.
விற்பனையாளர் சுரேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வசந்திராதேவி, பொன்னமராவதி டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் ஆகியோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் மது கடையிலிருந்து அறிவாளால் வெட்டி பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்துள்ளது. டாஸ்மார்க் மது கடையில் அடிக்கடி குற்றம் சம்பவங்கள் நடக்கின்றன. ரவுடிகள் அட்டகாசம் தொடர்கின்றன.
இதைப் போலி சார் கட்டுப்படுத்த வேண்டும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஊழியர் சங்க நிர்வாகி ரசூல் தெரிவித்தார்.