இரும்பு கழிவுகளை தீ வைத்து எரித்ததால் விபரீதம்

இரும்பு கழிவுகளை தீ வைத்து எரித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பழைய இரும்பு கடை உரிமையாளர் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல் புதூர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்த விநாயகமூர்த்தி (45) என்பவர் இரும்பு கழிவுகள் மற்றும் கண்ணாடிகளை தீ வைத்து எரித்துள்ளார். தீயிலிருந்து திடீரென ஒரு பொருள் வெடித்து விநாயகமூர்த்தி கண்ணில் பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து காட்பாடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story