தர்மபுரியில் இருந்து வழிதவறி வந்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு.
கோவை மாவட்டம், கணேசபுரத்தை சேர்ந்த ஆனந்தபாபு என்பவர் தனது குடும்பத்துடன் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று மீண்டும் கோவை செல்வதற்காக தர்மபுரி பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அவரது குடும்பத்தினர் டீ குடித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அவரது 5 வயது மகன் பிருத்திவி திடீரென சேலம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் தங்கள் குழந்தை கடத்தப்பட்டது என தர்மபுரி போலீசாரிடம் புகார் அளித்தனர். பின்னர் சிசிடிவி வீடியோவை ஆராய்ந்து மைக் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவன் சேலம் செல்லும் பேருந்தில் ஏறுவதை கண்டறிந்து தர்மபுரி போலீசார் ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பேருந்தில் இருந்த சிறுவனை மீட்டு தர்மபுரி போலீசார் மூலம் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.