வெள்ளிசந்தை அருகே சிறுமி மாயமானதாக புகார்

வெள்ளிசந்தை அருகே சிறுமி மாயமானதாக புகார்
சிறுமி மாயம் 
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே சிறுமி மாயமானதாக புகார் - போலீஸ் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள மணிவிளையில் உள்ள உறவினர் வீட்டில் தூத்துக்குடி மாவட்டம் குதிரைமொழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்தார். அவர் இங்குள்ள ஒரு மகளிர் தையல் பயிற்சி நிலையத்தில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி காலை சிறுமி வழக்கம் போல் தையல் பயிற்சிக்கு செல்வதாக தனது பாட்டியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். சிறுமியின் பாட்டி அன்று மாலை நட்டாலம் பகுதியில் நடந்த ஆலய விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று விட்டார். ஆலய நிகழ்ச்சி முடிந்து பாட்டி இரவில் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்தபோது பேத்தியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பாட்டி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வழக்கு பதிவு செய்தார். சிறுமியை காதல் சம்மந்தமாக மாயமானாரா? அல்லது யாராவது கடத்தி சென்றுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story