எம்பியை காணவில்லை - சுவரொட்டியால் பரபரப்பு
சுவரொட்டி
பள்ளிபாளையத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்பியை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையம் வசந்த நகர், ஆவரங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கண்டா வரச் சொல்லுங்க! என்ற தலைப்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி எம்பியை எங்கேயும் காணவில்லை என பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரவோடு இரவாக ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் யாரால் ,எதற்காக ஒட்டப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் குமாரபாளையம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து ஈரோடு பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்தி உள்ளார். இவர் தொகுதி பக்கம் வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் பரவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story