அருமனை அருகே மாயமான மாணவி காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

அருமனை அருகே  மாயமான மாணவி காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

காதலுடன் தஞ்சம் அடைந்த பெண்

அருமனை அருகே மாயமான மாணவி காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த நிலையில், பெற்றோரை கண்டவுடன் நகைகளை கழட்டி கொடுத்தார்.

திருவட்டார் அருகே உள்ள செறுகோல் போங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகள் சவுமியா.இவர் பிளஸ்-2 படித்து வருகிறார். தற்போது தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் அருமனை அருகே மேல்புறத்தில் உள்ள ஒரு கணினி பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

சம்பவத்தன்று வகுப்புக்கு சென்ற மாணவி மாலையில் வீட்டுக்கு திரும்ப வரவில்லை. அவரை பெற்றோர் பலஇடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து பெற்றோர் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மாயமான மாணவியை தேடி வந்தனர்.இந்தநிலையில் சவுமியா அருமனைஅருகே உள்ள மேல்பாலை வலியவிளையை சேர்ந்த அஜின் என்ற வாலிபருடன் அருமனை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

அவர் போலீசாரிடம், 'நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகி றோம். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். எங் களை சேர்த்துவைக்கவேண்டும்' என கெஞ்சினார்.

இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும்போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போது சவுமியாவின் பெற்றோர் போலீஸ் நிலையத்து வந்து மகளை கண்டித்ததுடன் கோபத்தில் அவர் அணிந்திருந்த நகை களை கழற்றி கொடுக்கும்படி கூறினர்.

உடனே, சவுமியா தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல் உள்ளிட்ட நகை களை கழற்றி கொடுத்தார். தொடர்ந்து காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் சவுமியாவை காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story