உதகையில் வார்டை காணவில்லை: திமுக பெண் கவுன்சிலரால் பரபரப்பு

உதகையில் வார்டை காணவில்லை: திமுக பெண் கவுன்சிலரால் பரபரப்பு

பதாகை ஏந்திய கவுன்சிலர்

உதகையில் 2வார்டை காணவில்லை அதை மீட்டெடுத்து தாருங்கள் நகராட்சி கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் பதாகை ஏந்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டாம் உதகை நகராட்சி அலுவலகத்தில் மாதம் தோறும் நடைபெறும் நகராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் முறையிட்டனர்.

அப்போது இரண்டாவது வார்டு திமுக கவுன்சிலர் நாகமணி என்பவர் தனது வார்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த வளர்ச்சி பணிகளும் நடப்பதில்லை. அதனால் வார்டு காணாமல் போய் உள்ளது. அதை மீட்டெடுத்த தாருங்கள்.

1890 பேர் வாக்காளர்களாக உள்ளனர் என பதாகை வைத்து கூட்டத்தில் பதாகையை உயர்த்தி பிடித்து கேள்வி எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அடிப்படைத் தேவைகள் பாரபட்சம் இல்லாமல் செய்யப்படும் என நகராட்சி துணைத் தலைவர் தெரிவித்தார் கூறியதையடுத்து 2வார்டு கவுன்சிலர் சமரசம் ஆனார்.

Tags

Next Story