வெள்ளிச்சந்தை அருகே இளம் பெண் குழந்தையுடன் மாயம்

வெள்ளிச்சந்தை அருகே இளம் பெண் குழந்தையுடன் மாயம்
மாயம்
வெள்ளிச்சந்தை அருகே இளம் பெண் குழந்தையுடன் மாயமான நிலையில் கணவர் போலீசில் புகார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பெரும் செல்வ விளையை சேர்ந்தவர் சங்கர் (33). இவரது மனைவி கவிதா (33). இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கவிதா தனது குழந்தையுடன் தாயார் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து சங்கர் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வெள்ளி சந்தை போலீசில் சங்கர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கவிதா மற்றும் அவரது குழந்தையை தேடி வருகிறார்கள். செல்போன் டவர் உதவியுடன் மாயமான இருவரையும் மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story