காணாமல் போன இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு
காணாமல் போன இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு
கடந்த 24ம் தேதி காணாமல் போன மனநலம் சரியில்லாத இளைஞரை தேடி வந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள நடூர் கிராமத்தை சேர்ந்த அக்பர் மகன் அஜித் கடந்த 24-ந்தேதிமாலை 3 மணியிலிருந்து காணவில்லை, காணாமல் போன இளைஞர் அஜித் மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது,இது குறித்து அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர், காணாமல் போன இளைஞர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் .விசாரணையில் பள்ளிப்பட்டி சேர்ந்த ஆசிரியர் செல்வம் என்பவரின் கிணற்றில் இளைஞரின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல்துறையினர் விரைந்து சென்று.உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story