மு.க.ஸ்டாலின் பிறந்த தினம்: ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரம் போடப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை தொடர்ந்து மார்ச்.1-இல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்கமோதிரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர திமுகச் செயலர் என்.ஆர்.சங்கர், நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், ராசிபுரம் ஊராட்சிக்குழுத் தலைவர் கே.பி.ஜெகந்தாதன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story